Vettri

Breaking News

கண்டியில் சுற்றிவளைப்பு : போதைப்பொருளுடன் சிறைக்காவலர் கைது!




 


ஹெரோயின் போதைப்பொருள் வைத்திருந்ததாக கூறப்படும் சிறைக்காவலர் ஒருவர் கண்டி நகரில் திகன பஸ் நிலையத்தில் தங்கியிருந்தபோது கைது செய்யப்பட்டதாக கண்டி தலைமையக பொலிஸார் தெரிவித்தனர். 

கைது செய்யப்பட்டவர் உடுதும்பர சிறைச்சாலையில் கடமையாற்றும் காவலாளி என்பதும் அவர் அப்பகுதியின் உயர் பொலிஸ் அதிகாரி என்பதும் தெரிய வந்துள்ளது.

இவர் இரத்தினபுரி பிரதேசத்தில் வசிக்கும் 30 வயதுடையவர் ஆவார்.

போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பேரில் முன்னர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ஒருவரிடமிருந்து பெறப்பட்ட தகவலின் அடிப்படையில், சுற்றிவளைப்பு நடத்தப்பட்டபோதே இவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

No comments