தொடர் தோல்விக்கு காரணம் இதுவே: வெளிப்படையாக கூறிய பிரபல வீரர்
அணியென்ற ரீதியில் தவறுகள் நடந்தமையே எமது தோல்விக்கு காரணம் என சிறிலங்கா கிரிக்கெட்டின் சகலதுறை வீரரான ஏஞ்சலோ மேத்யூஸ் தெரிவித்துள்ளார்.
இலங்கை கிரிக்கெட் அணி வீரர்கள், இந்தியாவில் இருந்து இன்று (10) நாட்டை வந்தடைந்துள்ள நிலையில், ஊடகங்களுக்கு கருத்த தெரிவித்த போதே ஏஞ்சலோ மேத்யூஸ் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
எமக்கு சிறந்ததொரு அணி ஒன்று இருந்த போதும் இந்த போட்டிகளில் நாம் பாரிய பின்னடைவினை சந்தித்தோம். அணியில் உள்ள வீரர்கள் தப்பில்லை, அணியாக விளையாடவில்லை.அது தான் எமது பின்னடைவுக்கு முக்கிய காரணம் என அவர் மேலும் சுட்காட்டியுள்ளார்.
தோல்விக்காக காரணம்
2023 ஐசிசி உலகக் கிண்ணகோப்பையில் இலங்கை அணி, விளையாடிய 9 போட்டிகளில் 2 போட்டிகளில் மாத்திரம் வெற்றிபெற்று மிகமோசமான முறையில் தனக்கான தகுதியினை இழந்து மீண்டும் நாடு திரும்பியுள்ளது.
மேலும் இந்த மோசமான பின்னடைவுக்கு குறித்து ஏஞ்சலோ மேத்யூஸ் கூறுகையில், “உண்மையிலேயே நடந்த போட்டிகளை அணி என்ற ரீதியில் சிறப்பாக நிறைவு செய்ய முடியாமல் போனமை குறித்து கவலையடைகிறோம்.
இந்தப் போட்டிகளில் எமக்கு நிறையவே பின்னடைவுகள் ஏற்பட்டது. முக்கியமான இடங்களில் எம்மால் அணி என்ற ரீதியில் தவறுகள் நடந்தது. அதுதான் தோல்விக்கான காரணம் என்று நினைக்கிறோம்.
தோல்வியுற்ற எல்லா போட்டிகளிலும் துடுப்பாட்டத்திலோ, பந்து வீச்சிலோ, களத்தடுப்பிலோ அல்லது மூன்றிலுமே நாம் சிறப்பாக விளையாடவில்லை.
முக்கிய காரணம்
கிரிக்கெட் இரசிகர்கள் எப்போதும் எம்முடன் இருந்தார்கள், அதிகமாக எங்களை நேசித்தார்கள், வெற்றியோ தோல்வியோ அவர்கள் எமக்கு உற்சாகமாக இருந்தார்கள்.கவலையாக உள்ளது. அணி என்ற ரீதியில் நாம் அவர்களை எந்தவகையிலும் சந்தோசப்படுத்தவில்லை.
அழுத்தம் என்பது வீரர் ஒருவருக்கு எல்லா போட்டிகளிலும் இருக்கத்தான் செய்யும். உலகக் கிண்ணத்தில் அது சற்றே அதிகமாக இருக்கும்.எல்லா போட்டிகளிலும் எமக்கு அழுத்தங்கள் என்பது பொதுவானது, அது எமக்கு பழக்கப்பட்டதொன்று ஆனால் அணி என்ற ரீதியில் நாம் சிறப்பாக விளையாடவில்லை.
எமக்கு சிறந்ததொரு அணி ஒன்று உள்ளது. என்றாலும் இந்த போட்டிகளில் நாம் பாரிய பின்னடைவினை சந்தித்தோம். அணியில் உள்ள வீரர்கள் தப்பில்லை என்றாலும், அணியாக விளையாடவில்லை. அது தான் எமது பின்னடைவுக்கு முக்கிய காரணம்.
விரைவில் எமது கிரிக்கெட் இரசிகர்களை மகிழ்விக்க எதிர்பார்த்துள்ளோம்” என கூறியுள்ளார்.
No comments