Vettri

Breaking News

மலையகத்திற்கான ரயில் சேவை வழமைக்கு!!





 மலையகத்திற்கான ரயில் சேவை இன்று அதிகாலை முதல் வழமைக்கு திரும்பியுள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.

பண்டாரவளைக்கும், ஹப்புத்தளைக்கும் இடைப்பட்ட ரயில் மார்க்கத்தில் நேற்று மாலை ஏற்பட்ட மண்சரிவு காரணமாக மலையக ரயில் சேவைக்கு பாதிப்பு ஏற்பட்டிருந்தது.

இதனையடுத்து, அதனை அகற்றும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு, மீள மலையக ரயில் போக்குவரத்து வழமைக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

No comments