அனைத்து தமிழ் பாடசாலைகளுக்கும் விடுமுறை !
தீபாவளியை முன்னிட்டு எதிர்வரும் திங்கட்கிழமை (13) நாடளாவிய ரீதியில் அனைத்து தமிழ் பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சர் அருணாசலம் அரவிந்தகுமார் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் திங்கட்கிழமை நவம்பர் 13 ஆம் திகதி முஸ்லிம் பாடசாலைகள் தவிர்ந்த அனைத்து தமிழ் பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்படுவதாகவும் இதற்கான மாற்றீடாக எதிர்வரும் 18 ஆம் திகதி சனிக்கிழமை கல்வி செயற்பாடுகள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
No comments