அரிய வகை வலம்புரி சங்கு ஒன்றுடன் சிக்கிய நபர்
5 இலட்சம் ரூபாவிற்கு விற்பனை செய்ய தயாராக இருந்த அரிய வகை வலம்புரி சங்கு ஒன்றுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
விமானப்படை புலனாய்வு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் நேற்று (14) பிற்பகல் காவல்துறையினருடன் இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் தியத்தலாவ கஹம்பிலிய புதிய கிராமத்தைச் சேர்ந்த 22 வயதுடைய இளைஞர் ஒருவர் ஆவார்.
சட்ட நடவடிக்கை
இந்நிலையில், குறித்த சந்தேக நபர் களுத்துறை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.
No comments