அந்தோனியார் ஆலயத்தில் சிலையை திருடிச்சென்ற இருவர் கைது !
மொரட்டுமுல்லை புனித அந்தோனியார் ஆலயத்தில் சிலையொன்றை திருடிச்சென்ற குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த இருவரும் மல்வானை பிரதேசத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளதோடு சம்பவத்திற்கு பயன்படுத்தப்பட்ட காரும் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.
வேறொரு தேவாலயத்தில் காரைப் பயன்படுத்தி கொள்ளையடிக்கும் காட்சிகள் அந்த பகுதியில் உள்ள சி.சி.ரி.வி. கமெராவில் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments