Vettri

Breaking News

ரணிலுக்கு ஆதரவளிக்க தயாராகும் சஜித் கட்சி உறுப்பினர்கள்!!




எதிர்வரும் வருட வரவு செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு உள்ளிட்ட நாட்டுக்கான நல்ல யோசனைகள் நிறைவேற்றப்பட்டால் அதற்கு ஆதரவளிக்க, ஐக்கிய மக்கள் சக்தி கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று தயாராக இருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

எதிர்வரும் நாட்களில் இது தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிடம் தெரியப்படுத்த தீர்மானித்துள்ளனர்.

அண்மையில் சப்ரகமுவ மாகாண நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் நுகேகொடை இல்லத்தில் நடைபெற்ற சிநேகபூர்வ சந்திப்பில் இந்த விடயம் முதன்முறையாக பேசப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதில் தென் மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் சிரேஷ்ட ஆணையாளரும் கலந்து கொண்டுள்ளார்.

ரணிலுக்கு ஆதரவளிக்க தயாராகும் சஜித் கட்சி உறுப்பினர்கள் | Sajith Party Members Ready To Support Ranil

தற்போது மக்கள் சிரமங்களை எதிர்நோக்கி வரும் நிலையில், வரவு செலவுத் திட்டத்தில் உள்ள நல்ல யோசனைகள் முன் வைத்தால் அதற்கு எதிர்ப்பு வெளியிட்டால் கிராமங்களுக்கு செல்ல முடியாத நிலை ஏற்படக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக இங்கு கலந்துரையாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 


 

No comments