முச்சக்கரவண்டி மோதி பெண் உயிரிழப்பு
கண்டி - தென்னக்கும்புர பகுதியில் முச்சக்கரவண்டி மோதி பெண் ஒருவர் நேற்று (13) உயிரிழந்துள்ளதாக கண்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு உயிரிழந்தவர் தென்னக்கும்புர பிரதேசத்தை சேர்நத 72 வயதுடைய பெண் ஒருவர் ஆவார்.
இவர் கண்டி ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
ஆட்டோ சாரதி கண்டி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கண்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
No comments