Vettri

Breaking News

சுய தொழில் முயற்சியாளர்களை ஊக்குவிக்கும் நோக்கில் காசோலைகள் வழங்கி வைப்பு!!!




 சுய தொழில் முயற்சியாளர்களை ஊக்குவிக்கும் நோக்கோடு இரண்டாம் கட்ட காசோலைகள் வழங்கி வைப்பு


சுய தொழில் முயற்சியாளர்களை ஊக்குவிக்கும் நோக்கோடு




கிழக்கு மாகாண சமூக சேவைகள்  திணைக்களத்தின் ஊடாக தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு கட்டம் கட்டமாக காசோலைகள் வழங்கப்பட்டுவருகின்றது. 


அந்தவகையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் பல பயனாளிகள் விண்ணப்பித்திருந்த போதிலும் முதற்கட்டமாக தெரிவு செய்யப்பட்ட 8 பயனாளிகளுக்கு கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும், மாவட்ட அபிவிருத்தி குழு தலைவருமான கௌரவ சிவ.சந்திரகாந்தன் அவர்களினால் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பிராந்திய காரியாலயத்தில் வைத்து காசோலைகள் அண்மையில் வழங்கி வைக்கப்பட்டிருந்தது அதன் இரண்டாம் கட்ட காசோலைகள் தெரிவுசெய்யப்பட்ட13 பயனாளிகளுக்கு தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் பொதுச்செயலாளரும் முன்னாள் மாகாண சபை உறுப்பினரும் தற்போதைய கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரின் பிரத்தியேக செயலாளருமான பூபாலபிள்ளை பிரசாந்தன் மற்றும் மாவட்ட அபிவிருத்தி குழு தலைவரின் பிரத்தியேக செயலாளரும், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தேசிய அமைப்பாளருமான தம்பிராஜா தஜீவரன் ஆகியோரால்  நேற்றைய தினம் வழங்கி  

வைக்கப்பட்டது.


இதன்போது மாவட்ட சமூக சேவை இணைப்பாளர் அருண்மொழி உட்பட பயனாளிகள் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

No comments