Vettri

Breaking News

அமரர் கந்தசாமி கணேசமூர்த்தி அவர்களுக்கான ஆத்மசாந்திப்பிராத்தனை!!







சுவாமி விபுலாநந்தர் ஞாபகார்த்த பணிமன்றத்தின் ஏற்பாட்டில்  இடம்பெற்ற   சுவாமி விபுலாநந்தர் ஞாபகார்த்த பணிமன்றத்தின் முன்னாள் செயலாளர் மற்றும் பொருளாளரும், சுவாமி  விபுலாநந்தர் ஞாபகார்த்த மணிமண்டப ஸ்தாபகர்களில் ஒருவருமான அமரர் கந்தசாமி கணேசமூர்த்தி அவர்களுக்கான ஆத்மசாந்திப்பிராத்தனையும் சேவை நயப்புரை நிகழ்வும் சுவாமி விபுலாநந்தர் ஞாபகார்த்த மணிமண்டபத்தில்  மன்ற தலைவர் திரு சோ.ஸுரநுதன் தலமையில் இடம்பெற்றதுடன் இந்நிகழ்வுக்கு காரைதீவு பிரதேசசபை செயலாளர் திரு அ.சுந்தரகுமார் கெளரவ அதிதியாக கலந்து கொண்டதுடன் மன்ற போசகளான திரு.வெ.ஜெயநாதன், திரு விரி சகாதேவராஜா,திரு த.சச்சிதானந்தம், காரைதீவு அறங்காவலர் ஒன்றிய தலைவர் திரு இரா.குணசிங்கம்,   பணிமன்ற உறுப்பினர்கள், ஆலயதர்மகர்த்தாக்கள், குடும்ப உறவினர்கள் , நண்பர்கள், பொது அமைப்பினர், விளையாட்டுகழகங்கள் கலந்துகொண்டனர். நிகழ்வுகளாக  பிராத்தனை  சிவபுராண பதிகம்,மோட்சமாலை, பூஸ்பாஞ்சலி, ஆத்மசாந்தி பிராத்தனை, தீபாராதனை,தலமையுரை,சிறப்புரைகள் என்பன இடம்பெற்றன. மன்ற போசகளான திரு.வெ.ஜெயநாதன், திரு விரி சகாதேவராஜா, காரைதீவு அறங்காவலர் ஒன்றிய தலைவர் திரு இரா.குணசிங்கம்,  ஶ்ரீ கண்ணகி அம்மன் ஆலய தர்மகர்த்தா எந்திரி. ப. இராஜமோகன், ஶ்ரீ பாலையடி பால விக்னேஸ்வரர் ஆலய தலைவர் திரு இ. தவராஜா,  கவிஞர் ம.சசிப்பிரியன் (விபுலசசி), மன்ற பொருளாளர் திரு வி.குலேந்திரன் , காரைதீவு பிரதேசசபை செயலாளர் திரு அ.சுந்தரகுமார் ஆகியோரின் உரை இடம்பெற்றது. குடும்பத்தினர் சார்பாக அன்னாரது சகோதரர் திரு. க. லோகநாதன் அவர்கள் உரையாற்றினார். நன்றியுரையினை மன்ற செயலாளர் திரு கு.ஜெயராஜி நிகழ்த்தினார். நிகழ்வினை  மன்ற உபதலைவர் திரு எஸ்.சிவராஜா அவர்கள் தொகுத்து வழங்கினார்.

No comments