Vettri

Breaking News

தொடர் மழையினால் நானுஓயாவிலும் வெள்ளம்







 நுவரெலியா மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் கடும் மழை காரணமாகவும் மாவட்டத்தின் பல பாகங்களிலும் வெள்ளம் ஏற்பட்டுள்ள காரணமாக மக்களின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது. 

இடைவிடாது பெய்து வரும் கடும் மழை காரணமாக வெள்ளபெருக்குடன் சிறு சிறு மண்சரிவுகளும் ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக 476/ஏ கிரிமிட்டி கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில்  டெஸ்போட், கிரிமிட்டி, கிளாரண்டன் போன்ற பகுதிகளில் வெள்ள நீர் பெருக்கத்தால் விவசாய நிலங்கள் மற்றும் தோட்ட தொழிலாளர்களின் குடியிருப்புகளும் பாதிக்கப்பட்டுள்ளன இதனால் மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்துள்ளனர்.

எனினும், மரக்கறி தோட்டங்களில் வெள்ளம் பாய்ந்தோடியதால், பாதிப்பு ஏற்பட்டுள்ளது அதிகமாக நானுஓயா கிளாரண்டன் மற்றும் டெஸ்போட் பகுதிகளில் சனிக்கிழமை (04) பிற்பகல் வேளையில் பெய்த அடை மழை காரணமா அதிகளவான மரக்கறி தோட்டங்கள் நீரில் மூழ்கியுள்ளன.

கால்வாய்கள் முறையாக பராமரிக்கப்படாத நிலையில்  வெள்ளம் ஏற்பட்டமை விவசாய காணிகள் மூழ்குவதற்கு முக்கிய காரணம் என விவசாயிகள் கவலை வெளியிட்டுள்ளனர்

No comments