Vettri

Breaking News

இலங்கை நீதித்துறை வரலாற்றில் இளவயதில் நீதிபதியாகத் தெரிவான தமிழ்ப் பெண்




 இலங்கை நீதித்துறை வரலாற்றில் மிக இளவயது  தமிழ் பெண்மணி ஒருவர் நீதிபதியாகத்  தேர்வாகியுள்ளார்.

வட மாகாணம் யாழ்.மாவட்ட வரலாற்றில் மிக இளவயது தமிழ் பெண் நீதிபதியாக யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த திருமதி மாதுரி நிரோசன் எதிர்வரும் முதலாம் திகதி பதவிப்பிரமாணம் செய்யவுள்ளார்.

யா/சுழிபுரம் விக்டோரியாக் கல்லூரியின் பழைய மாணவியான இவர் தனது 31வது வயதில் நீதிபதியாக பதவியேற்கவுள்ளார். 


இலங்கை நீதித்துறை வரலாற்றில் இளவயதில் நீதிபதியாகத் தெரிவான தமிழ்ப் பெண்; குவியும் பாராட்டுக்கள் | A Tamil Woman Who Became A Judge At A Young Age

யாழ்.வரலாற்றில் ஓர் இளம் நீதிபதியாக மாதுரி பதவிப்பிரமாணம் செய்யவுள்ளார்.

அதேவேளை இலங்கையில்  தமிழ் நீதிபதிகள் உருவாகுவது எட்டாக் கனியாகவே உள்ளது.

இந்நிலையில் நாடளாவிய நீதியில் இடம்பெற்ற நீதிபதிகளுக்கான போட்டியில், மாதுரி அகில இலங்கை ரீதியில் இவர் 12ஆவது இடத்தை பிடித்துள்ளார்.

இந்நிலையில் யாழ்ப்பாணத்தில் இருந்து தெரிவான இளம் தமிழ் நீதிபதி என்ற சிறப்பையும் இவர் பெற்றுள்ளார். 

இந்நிலையில் பலரும் அவருக்கு பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துவருகின்றனர்.

No comments