இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுக்கான இடைக்கால குழு
தற்போதைய கிரிக்கெட் நிர்வாக சபையை இடைநிறுத்தி இலங்கை கிரிக்கெட்டுக்கான ஏழு பேர் கொண்ட இடைக்கால குழுவை நியமிக்க விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க ஏற்பாடு செய்துள்ளார்.
1973 ஆம் ஆண்டின் 25 ஆம் இலக்க விளையாட்டுச் சட்டத்தின்படி, விளையாட்டுத்துறை அமைச்சருக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களின்படி அமைச்சர் இடைக்காலக் குழுவை நியமித்துள்ளார்.
இடைக்கால குழு
இந்த இடைக்காலக் குழுவின் தலைவராக 1996 ஆம் ஆண்டு இலங்கை அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்ற அர்ஜுன ரணதுங்க மற்றும் ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதிகளான எஸ்.ஐ. இமாம், ரோஹினி மாரசிங்க மற்றும் ஐரங்கனி பெரேரா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், இந்த இடைக்கால குழுவின் உறுப்பினர்களாக உபாலி தர்மதாச, ரகித ராஜபக்ஷ மற்றும் ஹிஷாம் ஜமால்தீன் ஆகியோரை விளையாட்டுத்துறை அமைச்சர் நியமித்துள்ளார்.
இலங்கை கிரிக்கெட் அணியின் போட்டித் தோல்விகளுக்கு தெரிவுக்குழுவும் இலங்கை கிரிக்கெட் நிறுவனமும் பொறுப்பேற்று உரிய அதிகாரிகள் தமது பதவிகளை நீக்கம் செய்ய வேண்டும் என விளையாட்டுத்துறை அமைச்சர் கடந்த 3ஆம் திகதி கடிதம் ஒன்றை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments