இலங்கை கிரிக்கெட் விவகாரம்! விசாரணைக் குழுவிற்குள் நுழைந்த வெளி நபர்
கோப் எனப்படும் நாடாளுமன்ற பொது முயற்சியாண்மைக்கான கோப் குழுவின் தலைவர் ரஞ்சித் பண்டாரவின் மகன் குழுவின் கடைசி கூட்டத்தில் பிரசன்னமானது தவறு என சுட்டிக்காட்டிய சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன, இந்த விடயம் தொடர்பில் ஆராயப்படும் என உறுதியளித்துள்ளார்.
இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் அதிகாரிகள் கடந்த செவ்வாய்க்கிழமை கோப் குழுவிற்கு அழைக்கப்பட்ட போது, கோப் குழுவின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் பண்டாரவின் மகன் கனிஷ்க பண்டார கலந்து கொண்டதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
விசாரணை
கோப் குழுவில் வாய் மூடியிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ள எதிர்க்கட்சித் தலைவர், இவ்வாறானதொரு பின்னணியில் ரஞ்சித் பண்டாரவின் மகன் எவ்வாறு கோப் குழுவில் பங்குபற்றினார் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்த நிலையில், குறித்த விவகாரம் தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்படுமென மகிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
No comments