Vettri

Breaking News

வெள்ளவத்தையில் சடலமாக மீட்கப்பட்ட யாழ்ப்பாண இளைஞன்!




 




வெள்ளவத்தை கடற்கரையில் இருந்து மீட்கப்பட்ட யாழ். இளைஞனின் சடலம் தற்போது களுபோவில வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

நேற்று மதியம் நண்பர்களுடன் இணைந்து வெளியில் சென்றிருந்ததாகவும், இந்தநிலையிலேயே இன்றையதினம் குறித்த இளைஞன் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாகவும் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும், சடலம் மீதான பிரேத பரிசோதனைகளின் பின்னரே மரணத்திற்கான காரணம் தெரியவரும் என குறிப்பிடப்படுகின்றது.கொழும்பு வெள்ளவத்தை கடற்கரையில் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த இளைஞர் ஒருவரின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

இந்த மீட்பு சம்பவம் இன்று(05) காலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இளைஞனின் சடலத்தை பார்த்தவர்கள் தெரிவித்த தகவலை தொடர்ந்து விரைந்து சென்ற காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

யாழ் இளைஞன்

யாழ்ப்பாணத்தை சேர்ந்த 28 வயதான சர்வானந்தா திருசாந் என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.


இவரின் முகத்திலும் உடலிலும் அடிகாயங்கள் காணப்படுகின்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சடலம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வெள்ளவத்தை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

No comments