பாடசாலை மாணவி எடுத்த விபரீத முடிவு
பாடசாலை மாணவியொருவர் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
தெல்கொட நரங்வல பிரதேசத்தில் நேற்று (05) மாலை தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக மீகாஹவத்த காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
வீட்டில் வசிப்பவர்கள் யாரும் இல்லாத வேளையில், கடிதம் ஒன்றை எழுதி வைத்துவிட்டு வீட்டில் உள்ள அறையொன்றில் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.
பிரேத பரிசோதனை
பியகம் திடீர் மரணவிசாரணை அதிகாரி டாக்டர் யு.எல்.எஸ்.ஹர்ஷஜித் குணசேகர நேற்று (05) பிற்பகல் சம்பவம் இடம்பெற்ற இடத்திற்கு சென்று சடலத்தை பரிசோதனை செய்து பிரேத பரிசோதனைக்காக கம்பஹா பொது வைத்தியசாலைக்கு அனுப்புமாறு காவல்துறையினருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
உயிரிழந்த இளம் பெண் தோம்பே பிரதேசத்தில் உள்ள பெண்கள் பாடசாலையில் உயர்தரத்தில் கல்வி கற்று வந்த 18 வயதுடைய ஒரு மாணவி ஆவார்.
மேலதிக விசாரணை
இந்நிலையில், உயரிழந்த மாணவியின் பிரேத பரிசோதனை இன்று (06) கம்பஹா பொது வைத்தியசாலையில் நடைபெறவிருக்கிறது.
மேலும், சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
No comments