பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகளில் மாற்றம் இல்லை!!
எரிவாயு விலை அதிகரிக்கப்பட்டுள்ள போதிலும், பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகளை அதிகரிக்க விரும்பவில்லை என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
தேவை வெகுவாக குறைந்துள்ளதால், தொழில்துறையை நிலைநிறுத்துவதற்கு தாங்கள் ஏற்கனவே போராடி வருவதாகவும், எனவே பேக்கரி பொருட்களின் விலையை உயர்த்தும் எண்ணம் இல்லை என சங்கத்தின் தலைவர் என்.கே.ஜெயவர்தன தெரிவித்துள்ளார்.
எரிவாயு, எரிபொருள், மின்சாரம் மற்றும் மூலப்பொருட்களின் தொடர்ச்சியான அதிகரிப்பு உற்பத்தி செலவை அதிகரித்துள்ளதால், தொழில்துறையை ஆதரிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலைகள் மேலும் அதிகரிப்பது மக்கள் அவற்றை வாங்குவதைத் தடுக்கும் அவர் குறிப்பிட்டார். எனவே தற்போதைய விலையில் தொடர்ந்து பொருட்களை விற்பனை செய்யுள்ளதாகவும் தெரிவித்தார்.
No comments