Vettri

Breaking News

கிரிக்கெட் விளையாட்டை சுத்தம் செய்ய தேவையான சட்ட நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் : புதிய விளையாட்டுத்துறை அமைச்சர் உறுதி!




 எவருக்கும் எதிராகச் செல்ல தாம் எதிர்பார்க்கவில்லை, உலகக் கோப்பையை வென்ற இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் அர்ஜுன ரணதுங்கா உட்பட அனைவரின் உதவியுடன் மீண்டும் கிரிக்கெட் விளையாட்டை "சுத்தம்" செய்ய விரும்புவதாக புதிய விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ உறுதியளித்துள்ளார்.

புதிய விளையாட்டுத்துறை அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்து கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக மேலும் அவர் குறிப்பிடுகையில்,

“நாட்டில் கிரிக்கெட் விளையாட்டை தூய்மைப்படுத்த தேவையான சட்ட நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும்.

நாட்டில் கிரிக்கெட் விளையாட்டை தூய்மைப்படுத்த தேவையான சட்ட நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் : புதிய விளையாட்டுத்துறை அமைச்சர் உறுதி! | Harin Fernando About Sl Cricket

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) விதித்துள்ள தடையை நீக்குவதன் மூலம் கிரிக்கெட் விளையாட்டை மீண்டும் இலங்கைக்கு கொண்டு வருவார்கள் என்று மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

ஐசிசி தடையை ஒரு சில நாட்களுக்குள் விரைவில் மாற்றியமைப்பது மிகவும் முக்கியம்.” என்றார்.

விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் பதவியில் இருந்து ரொஷான் ரணசிங்க பதவி நீக்கம் செய்யப்பட்ட சில மணி நேரங்களின் பின்னர், ஹரின் பெர்னாண்டோ நேற்று (27) மாலை அதிபர் ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் விளையாட்டுத்துறை அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

No comments