Vettri

Breaking News

யாழில் மின்சாரம் தாக்கி இளைஞன் பலி!




யாழ்ப்பாணம் சாவகச்சேரி நகரில் அமைந்துள்ள நிதி நிறுவனம் ஒன்றின் பணியாளர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவம் இன்று காலை 9.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

அலுவலகத்தில் தண்ணீர் வராததால் தண்ணீர் தொட்டியை பார்ப்பதற்காக மேலே ஏறிய சந்தர்ப்பத்தில் மின்சாரம் தாக்கியுள்ளது.

மேலதிக விசாரணை

இதன்போது நுணாவில் பகுதியைச் சேர்ந்த 26 வயதான கஜந்தன் என்ற இளைஞனே ஆபத்தான நிலையில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

யாழில் மின்சாரம் தாக்கி இளைஞன் பலி! (படங்கள்) | Death Police Investigating Srilanka

இந்த சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.GalleryGalleryGallery

No comments