Vettri

Breaking News

மட்டக்களப்பு சிறைச்சாலையில் கைதி ஒருவர் உயிரிழப்பு





 மட்டக்களப்பு சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்த  ஆண் கைதி ஒருவர் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்ட சடலத்தை பிரேத பரிசோதனைக்கு உட்படுத்துமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற  நீதவான் பீற்றர் போல் நேற்று புதன்கிழமை (29) உத்தரவிட்டார்.

கொக்கட்டிச்சோலை முனைக்காடு பிரதேசத்தைச் சேர்ந்த 47 வயதுடைய சோமசுந்தரம் துரைராஜா என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த நபர் நீதிமன்ற  வழக்கு ஒன்றில் ஆஜராகாத நிலையில் நீதிமன்ற பிடிவிறாந்து கட்டளைக்கமைய கடந்த 22 ஆம் திகதி கொக்கட்டிச்சோலை பொலிஸார் கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் அவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்ட நிலையில் அவரை சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில், குறித்த நபர் சிறைச்சாலையில் சம்பவதினமான நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை (28) சிறைச்சாலையில் மயங்கி வீழ்ததையடுத்து, வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற நிலையில் அவர் ஏற்கனவே உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்தனர். இந்நிலையில், சடலம் பிரேத அறையில் வைக்கப்பட்ட நிலையில் சம்பவம் இடம்பெற்ற இடமான சிறைச்சாலைக்கு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் பீற்றர் போல் நேற்று புதன்கிழமை (29)  சென்று பார்வையிட்டு விசாரணைகளை மேற்கொண்டு சடலத்தை பிரேத பரிசோதனைக்கு உட்படுத்துமாறு உத்தரவிட்டார்.

இது தொடர்பான மேலதிக விசாணைகளை மட்டு தலைமையக பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

No comments