Vettri

Breaking News

சீனி வரி குறித்து எழுந்துள்ள சந்தேகம்!




 அதிபர் ரணில் விக்ரமசிங்கவினால் சீனி வரியை அதிகரித்து வர்த்தமானி அறிவித்தல் வெளியிடுவதற்கு முன்னர் அது தொடர்பான தகவல்கள் சில சீனி இறக்குமதியாளர்களுக்கு கிடைத்திருந்ததா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

கடந்த இரண்டு வாரங்களில் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட மொத்த சீனியில், பாதியளவு ஒரு நிறுவனத்தினால் மாத்திரம் இறக்குமதி செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த சந்தேகம் எழுந்துள்ளது.

இறக்குமதி 

கடந்த மாதம் 20ஆம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதியில் 18 இறக்குமதியாளர்களால் 22,832 மெற்றிக் டொன் சீனி இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.

சீனி வரி குறித்து எழுந்துள்ள சந்தேகம் | Was Information On Sugar Tax Leaked Before Gazette

அவற்றில் 10,210 மெற்றிக் டன் சீனி ஒரு நிறுவனத்தினால் மாத்திரம் இறக்குமதி செய்யப்பட்டவை என சுங்கத் திணைக்களத்தின் தகவல்களின் ஊடாக தெரியவந்துள்ளது.

சீனி விலை

இந்தநிலையில், நேற்று முதல் நடைமுறையாகும் வகையில், இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோகிராம் சீனிக்கான விஷேட பண்ட வரி 25 சதத்திலிருந்து 50 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

No comments