Vettri

Breaking News

சர்ச்சைக்குரிய மத போதகர் ஜெரோம் நாட்டுக்கு வருகை!!





பௌத்த மதத்திற்கு அவமரியாதையை ஏற்படுத்தும் வகையில் கருத்துக்களை வெளியிட்டு, சிங்கப்பூர் சென்ற மத போதகர் ஜெரோம் பெர்னாண்டோ இன்று புதன்கிழமை  (29) கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.

இவர் தோஹாவிலிருந்து இன்று அதிகாலை 01.32 மணியளவில் கட்டார் ஏர்வேஸ் விமானம் மூலம் கட்டுநாயக்கவை வந்தடைந்த நிலையில், விமான நிலையத்திலிருந்து சிறப்பு விருந்தினர் வழியாக வெளியேறியிருந்தார். ஜெரோம் பெர்னாண்டோ போதகருடன் மேலும் இருவர் வருகைதந்துள்ளனர்.

போதகர் ஜெரோம் பெர்னாண்டோ பௌத்த மதத்திற்கு அவமரியாதையை ஏற்படுத்தும் வகையில் கருத்துக்களை வெளியிட்ட நிலையில், நாட்டைவிட்டு வெளியேறியிருந்தார்.

இதன் பின்னர்  நீதிமன்றத்தால் அவரை  கைதுசெய்யுமாறு உத்தரவிடப்பட்டிருந்த நிலையில், பின்னர் அவர் இலங்கை வரும் போது கைதுசெய்ய வேண்டாமெனவும் நாட்டுக்கு வருகை தந்து 48 மணிநேரத்தில் வாக்குமூலமொன்றை வழங்க வேண்டுமென்றும் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


 

No comments