கொடிகாமத்தில் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது
யாழ்ப்பாணம் - கொடிகாமம் காவல்துறைப் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இன்று (17) கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
காவல்துறையினருக்கு கிடைத்த தகவலுக்கமைய 38 வயதான நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டார்.
10 கிலோ 875 கிராம் கேரள கஞ்சா
இதேவேளை அவரிடமிருந்த 10 கிலோ 875 கிராம் கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
சந்தேக நபரை நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொடிகாமம் காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
No comments