நுவரெலியா மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!
மத்திய மலைத்தொடர்களின் மேற்கு சரிவுப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையால் டெவோன் மற்றும் சென் கிளேர் அருவிகளின் நீர் கொள்ளளவு அதிகரித்துள்ளது.
தற்போது, ஹட்டன் கொழும்பு மற்றும் ஹட்டன் நுவரெலியா பிரதான வீதிகளில் கடும் பனிமூட்டம் காரணமாக போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.
அறிவுறுத்தல்
அத்துடன் பனிமூட்டம் அதிகரித்துள்ளதன் காரணமாக நுவரெலியா பயணிப்போர் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் நீர் கொள்ளளவு அதிகரித்துள்ளதால் வான் கதவுகள் தானாக திறக்கப்படுவதால் நீர்த்தேக்க அணைக்கு கீழே கொத்மலை ஓயாவின் இருபுறங்களிலும் வசிப்பவர்கள் அவதானமாக இருக்குமாறு நுவரெலியா மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு கோரியுள்ளது.
No comments