குடும்பத்தகராறில் தந்தையை அடித்து கொலை செய்த மகன்!
ஓபநாயக்க பிரதேசத்தில் குடும்ப தகராறில் தந்தை ஒருவரை அடித்து கொலை செய்த மகனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கடந்த 12ம் திகதி மதியம் வீட்டில் தாய், தந்தை மற்றும் மகனுக்கு இடையே தகராறு ஏற்பட்டு, மகன் கோடாரி கைப்பிடியால் தந்தையை பலமுறை தாக்கியுள்ளனர்.
மறுநாள் காலை, காயமடைந்தவர் 1990 நோயாளர் காவுவண்டி சேவை ஊடாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
காவல்துறை விசாரணை
காயமடைந்தவர் இரத்தினபுரி ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.
ஓபநாயக்க, ஹலின்ன பகுதியை வசிப்பிடமாகக் கொண்ட 72 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையான அமரசிங்க என்ற நபரே உயிரிழந்துள்ளார்.
சந்தேகநபரின் மகன் வாக்குமூலத்தைப் பெற்றுக் கொண்டதன் பின்னர் பலாங்கொடை நீதவான் அல்லது மாவட்ட நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
No comments