Vettri

Breaking News

தொன் கணக்கில் சீனி பறிமுதல்: களஞ்சியசாலைகளுக்கு சீல்




 கொழும்பில் பேலியகொட மற்றும் கிராண்ட்பாஸ் பிரதேசத்திலுள்ள பதுக்கி வைக்கப்பட்டிருந்த 270 மெட்ரிக் தொன் சீனி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

நுகர்வோர் அதிகாரசபையின் சுற்றிவளைப்புகள் மற்றும் விசேட புலனாய்வுப் பிரிவினர் இன்று(14) மேற்கொண்ட விசேட சோதனையின் போதே குறித்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அத்தோடு, இந்த சீனி பதுக்கி வைக்கப்பட்டிருந்த களஞ்சியசாலைகளுக்கு அதிகாரிகள் சீல் வைப்பதற்கு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

வழக்குப்பதிவு

மேலும், மொத்த விற்பனை நிலையத்தை ஆய்வு செய்தபோது, ​​அதிக விலைக்கு விற்க தயாராக இருந்த 5 மெட்ரிக் தொன் சீனியை நுகர்வோர் அதிகாரசபை அதிகாரிகள் பறிமுதல் செய்து, கடைக்கு சீல் வைத்து, உரிமையாளர் மீது வழக்குப்பதிவு செய்ய நடவடிக்கை எடுத்தனர். 

தொன் கணக்கில் சீனி பறிமுதல்: களஞ்சியசாலைகளுக்கு சீல் | 270 Mt Sugar Confiscation Officers Seal Warehouses

No comments