பெட்ரோலிய களஞ்சிய முனையத்தின் விசேட அறிவிப்பு
இந்தியா எரிபொருள் நிறுவனத்திடமிருந்து(lanka ioc) கொள்வனவு செய்யப்படவுள்ள டீசல் மற்றும் பெட்ரோல் தொடர்பான விசேட அறிவிப்பை பெட்ரோலிய களஞ்சிய முனையம் வெளியிட்டுள்ளது.
குறித்த அறிவிப்பில், 92 டீசல் மற்றும் பெட்ரோல் தொகையை எடுத்துச் செல்லும் எம்.டி. ஃபோஸ் பவர் கப்பல் கடந்த 5ஆம் திகதி அதிகாலை கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் , இறக்குமதி செய்யப்படவுள்ள 92 பெட்ரோல் தரநிலை பரிசோதனைகள் மூலம் உறுதி செய்யப்பட்டதையடுத்து அந்த கப்பலில் இருந்து இறக்குவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் ஏமாற வேண்டாம்
டீசல் கையிருப்பின் சோதனை இன்னும் நடை பெற்று வருவதால், முடிவைப் பொறுத்து, அவற்றை இறக்குமதி செய்வது தொடர்பில் தீர்மானங்கள் எடுக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.
அத்தோடு, பெட்ரோல், டீசல் தொடர்பில் பல்வேறு ஊடகங்களால் பரப்பப்படும் தவறான விளம்பரங்களுக்கு மக்கள் ஏமாற வேண்டாம் என பெட்ரோலிய களஞ்சிய முனையத்தினால் கேட்டுக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments