தேங்கி கிடக்கும் தபால் பொதிகள்
கொழும்பு மத்திய தபால் பரிவர்த்தனை மற்றும் பிற தபால் நிலையங்களில் 15 முதல் 20 லட்சம் வரையிலான தபால் பொதிகள் மற்றும் பொருட்கள் தேங்கிக் கிடப்பதாக தபால் திணைக்கள தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.
தபால் தொழிற்சங்க பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக இவ்வாறு பொதிகள் தேங்கி கிடப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பணிப்புறக்கணிப்பால்
கண்டி மற்றும் நுவரெலியா தபால் நிலையங்களை விற்பனை செய்வதற்கு எதிர்ப்புத் தெரிவித்து தபால் தொழிற்சங்கங்கள் நேற்று முன்தினம் (08) இந்தப் பணிப்புறக்கணிப்பை ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments