Vettri

Breaking News

யாழ் நகரில் உள்ள விடுதியில் தங்கியிருந்த ஆணொருவர் சடலமாக மீட்பு!







யாழ்ப்பாணம் வைத்தியசாலை வீதியில் கொட்டடிப் பகுதியில் உள்ள தனியார் விடுதியில் ஆணொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் கொட்டடிப் பகுதியில் நேற்று (05) இரவு இடம்பெற்றுள்ளது.

மூன்று நாட்களாக குறித்த விடுதியில் தங்கியிருந்த நிலையில் அறைக்கு வெளியே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

காவல் நிலையத்தில் முறைப்பாடு

லால் பெரேரா என்கிற 61 வயதுடைய தென்னிலங்கையைச் சேர்ந்த பெரும்பான்மை இனத்தவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.


விடுதி உரிமையாளரால் யாழ்ப்பாணம் காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதையடுத்து காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.  

No comments