இரண்டாவது திருமணம் செய்து கொண்ட நடிகை அமலாபால்
சிந்து சமவெளி, மைனா, வேலையில்லா பட்டதாரி, தெய்வ திருமகள் உட்பட பல படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தவர் அமலா பால். தமிழ், தெலுங்கு, மலையாள மொழி படங்களில் தொடர்ந்து நடித்து வந்தார். ஆடை என்ற படத்தில் ஆடையில்லாமல் நடித்து பரபரப்பை ஏற்படுத்தினார். இயக்குனர் விஜய்யை காதலித்து திருமணம் செய்தார். பின்னர் அவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தனர்.
இதைத்தொடர்ந்து மீண்டும் சினிமாவில் நடித்து வந்த அமலாபால் கவர்ச்சியாக நடித்து வந்தார். சினிமா மட்டுமின்றி சமூக வலைத்தளங்களிலும் ஆர்வம் கொண்ட அமலாபால் வெளிநாடு மற்றும் பல்வேறு இடங்களுக்கு சென்று புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். சமீபத்தில் அமலாபாலின் நெருங்கிய நண்பரான ஜனா தேசாய் என்பவர் அவருக்கு லவ் புரோபோஸ் செய்தார் இது தொடர்பான வீடியோ வைரலானது.
இந்நிலையில், நடிகை அமலாபால் தனது நண்பர் ஜனா தேசாயை திருமணம் செய்துள்ளார். இவர்களது திருமணம் கொச்சியில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் நடந்துள்ளது. இதனை அமலாபால் தனது சமூக வலைதளத்தில் புகைப்படங்களை பகிர்ந்து அறிவித்துள்ளார். இவர்களுக்கு ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் வாழ்த்துகளைக் கூறி வருகின்றனர்
No comments