போர் நிறுத்தம் அறிவிக்கப்பட மாட்டாது: இஸ்ரேல் அதிரடி அறிவிப்பு
இஸ்ரேலிய பணயக் கைதிகள் விடுவிக்கப்படும் வரையில் ஹமாஸ் தரப்பினருடன் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட மாட்டாது என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அறிவித்துள்ளார்.
அமெரிக்க இராஜாங்க செயலாளர் என்டணி பிளிங்கனுடன் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலை அடுத்து ஊடகங்களுக்கு கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இஸ்ரேல் தாக்குதல்
அதேநேரம் பொது மக்களை பாதுகாப்பதற்காக மனிதாபிமான அடிப்படையில் போர் இடைநிறுத்தப்பட வேண்டும் என அமெரிக்க இராஜாங்க செயலாளர் குறித்த கலந்துரையாடலின் போது வலியுறுத்தியுள்ளார்.
இஸ்ரேலுக்கும், ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையே கடந்த 28 நாள்களாக நடந்து வரும் மோதலில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 11,800 ஐ கடந்துள்ளது.
இது குறித்து காசா சுகாதாரத் துறை அமைச்சகம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், இஸ்ரேல் தாக்குதலில் இதுவரை 9,257 போ் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பலஸ்தீனா்கள்
இதற்கிடையே, போா் தொடங்கியதற்குப் பிறகு மேற்குக் கரை பகுதியில் இஸ்ரேல் ராணுவத்தாலும், யூத குடியிருப்புவாசிகளாலும் 130 பலஸ்தீனா்கள் கொல்லப்பட்டனா்.
ஏற்கெனவே, தங்கள் எல்லைக்குள் ஊடுருவி தாக்குதல் நடத்திய ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஹமாஸ் அமைப்பினா் கொல்லப்பட்டதாகவும், ஹமாஸின் தாக்குதலில் இதுவரை 1,440 போ் உயிரிழந்ததாகவும் இஸ்ரேல் கூறியுள்ளது.
இதேவேளை, காசாவின் அல்-ஷிஃபா வைத்தியசாலைக்கு அருகில் நோயாளர் காவு வண்டிகள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளதாக காஸா சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
No comments