Vettri

Breaking News

கார் - லொறி விபத்தில் நீர்வாழ் உயிரின வளர்ப்பு அபிவிருத்தி அதிகார சபையின் முகாமைத்துவ உதவியாளர் பலி!




 




மொரகஹஹேன ஹொரகஸ் சந்தி பகுதியில் நேற்று (04) இரவு லொறி ஒன்றும் காரும் நேருக்கு நேர் மோதியதில் நீர்வாழ் உயிரின வளர்ப்பு அபிவிருத்தி அதிகார சபையின் முகாமைத்துவ உதவியாளர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக மொரகஹஹேன பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

விபத்தில் உயிரிழந்தவர் கல்பத்த பியகம பகுதியைச் சேர்ந்த 39 வயதுடைய சந்துன் ஜயசிங்க என்ற திருமணமானவர் ஆவார்.

உயிரிழந்தவர் கலந்துரையாடல் ஒன்றில் கலந்துகொண்டு காரில் வீடு திரும்பிக்கொண்டிருந்தபோதே லொறியுடன் மோதி விபத்துக்குள்ளாகி உயிரிழந்துள்ளதாக  பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

அவர் பயணித்த கார் பலத்த சேதமடைந்துள்ளதுடன், லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.  

இச்சம்பவம் தொடர்பில் மொரகஹஹேன பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments