விவசாயிகளுக்கு இன்று முதல் நட்டஈடு!
சிறுபோகத்தில் சேதமடைந்த பயிர்களுக்கான நட்டஈடு இன்று முதல் விவசாயிகளுக்கு வழங்கப்படும் என விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
முதற்கட்ட இழப்பீடுகளின் கீழ் 389 மில்லியன் ரூபாவை விவசாயிகளுக்கு பகிர்ந்தளிக்க விவசாய மற்றும் கிராமிய காப்புறுதி சபை நடவடிக்கை எடுத்துள்ளதாக அமைச்சு கூறியுள்ளது.
இதற்கமைய, இன்று காலை 09 மணி முதல் அங்குணுகொலபெலஸ்ஸவில் 250 விவசாயிகளுக்கு நட்டஈடு வழங்கப்படவுள்ளது.
கடந்த முறை சிறுபோகத்தில் 65 ஆயிரம் ஏக்கர்கள் வறட்சியினால் சேதமடைந்துள்ளதுடன், 11 ஆயிரம் ஏக்கர் நெற்செய்கை அறுவடைக்கு தயாராகவிருந்த நிலையில் மழையினால் அழிவடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments