Vettri

Breaking News

குளித்துக் கொண்டிருந்த நபர் மீது துப்பாக்கிசூடு: வெளியான காரணம்




 அம்பாறை மாயாதுன்ன பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

அதன்படி நேற்று (06) இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 42 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

பாதிக்கப்பட்டவர் தனது வீட்டின் பின்புறம் குளித்துக் கொண்டிருந்த போது, சுட்டுக் கொல்லப்பட்டதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

துப்பாக்கிச் சூட்டுக்குக் காரணம்

நெல் வயலில் ஏற்பட்ட தகராறே துப்பாக்கிச் சூட்டுக்குக் காரணம் என்று கூறப்படுகிறது.

குளித்துக் கொண்டிருந்த நபர் மீது துப்பாக்கிசூடு: வெளியான காரணம் | Gun Shooting Police Investigating Srilanka

இந்த நிலையில், சந்தேகநபர் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவரை பிடிக்க பண்டாரதுவ காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

No comments