மதுபோதையில் வாகனம் செலுத்திய நபருக்கு பிணைக் கைச்சாத்திடச் சென்றவர் அதிக மதுபோதையில் பொலிஸ் கான்ஸ்டபிள் மீது தாக்குதல்!
கண்டி தலைமையக பொலிஸ் நிலையத்தில் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை தாக்கியதாக கூறப்படும் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபர் அதிக மதுபோதையில் பொலிஸ் தலைமையகத்துக்குள் நுழைய முற்பட்டபோது, அவரைத் தடுக்க பொலிஸ் உத்தியோகத்தர் நடவடிக்கை எடுத்த நிலையிலேயே இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
தாக்குதலுக்கு உள்ளான பொலிஸ் உத்தியோகத்தர் சிகிச்சைக்காக கண்டி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மதுபோதையில் வாகனம் செலுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நபர் ஒருவருக்கு பொலிஸ் பிணையில் கைச்சாத்திடுவதற்காக குறித்த நபர் அதிக மதுபோதையில் பொலிஸ் தலைமையகத்துக்குள் நுழைய முற்பட்டுள்ளார். அப்போது பாதுகாப்பு கடமையில் இருந்த பொலிஸ் உத்தியோகத்தர் அவரைத் தடுத்து நிறுத்தியபோதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
No comments