வட மாகாண மக்களின் குடிநீர் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு!!
யாழ். நதி நீர் திட்டத்தின் ஊடாக வட மாகாண மக்களின் குடிநீர் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காண்பது தொடர்பில் கலந்துரையாடப்படுவதாக பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
யாழ். நதி நீர் திட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் பொறியியலாளர்கள் மற்றும் தொடர்புடைய நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாகவும் பாரம்பரியத்திற்கு ஏற்ப பிரச்சினையை கையாள்வது தொடர்பிலும் பிரதமர் ஆலோசித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போதுள்ள 40,000 ஏரிகளை மேம்படுத்தவும் மழை நீரை சேமிக்கவும் கடலில் கலக்கும் நதி நீரை சேகரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பிரதமர் தெரிவித்துள்ளார்.
No comments