பழக்கடையொன்றின் பெண் உரிமையாளருக்கு நடந்த துயரம்!
நாட்டில் நிலவுகின்ற சீரற்ற காலநிலையின் காரணமாக, விபத்துக்களும் உயிரிழப்புக்களும் அதிகரித்து வருகின்றன.
அந்த வகையில், கண்டி - மஹியங்கனை வீதியின் ரம்புக்வெல்ல பிரதேசத்தில் தெல்தெனிய பகுதியில் பழக்கடையொன்றின் மீது மண்மேடு சரிந்து விழுந்ததில் கடைக்குள் இருந்த பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மோசமான காலநிலை
நேற்றிரவு நிலவிய மோசமான காலநிலை காரணமாகவே இந்த இறப்பு சம்பவித்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மண்மேடு சரிந்து விழுந்ததில் குறித்த பெண் மண்ணில் புதையுண்டிருந்ததை கண்ட பிரதேச வாசிகள், காவல்துறையினருக்கு அறிவித்தனர்.
புதையுண்டிருந்தவரை மீட்டு
சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் பிரதேச வாசிகளின் உதவியுடன் புதையுண்டிருந்தவரை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்திருந்த போதும் அவர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த பெண் குறித்த கடையின் உரிமையாளர் என்றும், 37 வயது நிறைந்த அவர் தெல்தெனிய ரம்புக்வெல்ல பகுதியைச் சேர்ந்தவர் என்றும் பிரதேசவாசிகளால் அடையாளம் காணப்பட்டுள்ளது.
No comments