Vettri

Breaking News

தாயுடன் சென்ற பாடசாலை மாணவிக்கு நேர்ந்த துயரம்!




 தலதாகம்மன கெபிலிதிகொட புராதன விகாரைக்கு அருகில் இடம்பெற்ற வாகன விபத்தில் 16 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மாணவி தனது தாயார் ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிளின் பின் இருக்கையில் அமர்ந்து பயணித்த போது மோட்டார் சைக்கிள் வீதியின் நடுவில் கவிழ்ந்ததில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாணவி உயிரிழப்பு  

வீதியில் கவிழ்ந்த மோட்டார் சைக்கிள் மீது எதிர்திசையில் வந்த பேருந்து மோதியதில் தாய் மற்றும் மகள் இருவரும் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் மகள் உயிரிழந்துள்ளார்.

தாயுடன் சென்ற பாடசாலை மாணவிக்கு நேர்ந்த துயரம்! | Accident Police Investigating Srilanka

அத்தபத்து முல்லை பிரதேசத்தை சேர்ந்த ஹிமாயா கருணாரத்ன என்ற மாணவியே விபத்தில் உயிரிழந்துள்ளார்.

மேலதிக விசாரணை

மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்ற மாணவியின் தாய் படுகாயமடைந்த நிலையில் குருநாகல் போதனா வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்று வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்னர்.

தாயுடன் சென்ற பாடசாலை மாணவிக்கு நேர்ந்த துயரம்! | Accident Police Investigating Srilanka

இந்நிலையில் இந்த விபத்து சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments