ரயில் பாதை பராமரிப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஊழியர்கள் மீது பாறைகள் சரிந்து வீழ்ந்ததில் ஐவர் காயம்!
மலையக ரயில் பாதையில் பண்டாரவளை மற்றும் கினிகம ரயில் நிலையங்களுக்கு இடையில் ரயில் பாதை பராமரிப்பு பணிகளில் ஈடுபட்டிருந்த ஊழியர்கள் மீது திடீரென உயரத்திலிருந்த பாறைகள் சில சரிந்து வீழ்ந்ததில் ஐவர் காயமடைந்துள்ளனர்.
பண்டாரவளை ரயில்வே பிரிவின் 5 ரயில்வே ஊழியர்களே பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
மலையக ரயில் பாதையில் பண்டாரவளை மற்றும் கினிகம ரயில் நிலையங்களுக்கு இடையில் 162ஆவது மைலில் உள்ள பாலத்துக்கு அருகில் கடமையில் ஈடுபட்டிருந்தபோதே இந்தச் சம்பவத்துக்கு முகங்கொடுத்துள்ளனர்.
No comments