Vettri

Breaking News

வரவு செலவுத் திட்டத்தில் சம்பள உயர்வு நிச்சயம்




 அரச ஊழியர்கள் குறைந்தபட்சம் ரூ.20,000 சம்பள உயர்வை கோரும் நிலையில். அடுத்த ஆண்டு (2024) வரவுசெலவுத் திட்டத்தின் மூலம் உயர்த்தப்படவுள்ள சம்பள விகிதங்களைத் தீர்மானிப்பதற்கான “விரிவான பகுப்பாய்வு” தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார் .

2024ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் இம்மாத இறுதியில் (நவம்பர்) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள நிலையில், தற்போதைய பொருளாதாரச் சூழலைக் கருத்தில் கொண்டு அரசாங்க மற்றும் தனியார் துறை ஊழியர்கள் தங்களது சம்பளத்தை குறைந்தபட்சம் ரூ. 20,000 அதிகரிக்கக் கோரி போராட்டங்களை நடத்தி வருகின்றனர் .

இது குறித்து கருத்துத் தெரிவித்துள்ள நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய, அரச ஊழியர்களின் சம்பளத்தை உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதியும் நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சருமான ரணில் விக்கிரமசிங்கவும் தெளிவாக கூறியுள்ளார் . அதன்படி, சம்பள உயர்வு நிச்சயம் வழங்கப்படும் அதற்கான தொகைகளை நிர்ணயம் செய்வதற்கான ‘விரிவான அலசல்’ தற்போது நடைபெற்று வருகிறது .
“நம் நாட்டில் 1.4 மில்லியன் அரசு ஊழியர்களும், 600,000 ஓய்வூதியதாரர்களும் உள்ளனர்.அவர்களின் சம்பளத்தை 100 ரூபாய் உயர்த்தினாலும், அரசுக்கு ஆகும் செலவு மிக அதிகம்.எனவே இதை எப்படி செய்வது என்பது குறித்து தீவிரமாக ஆராய வேண்டும். எவ்வாறாயினும், நாம் அனைவரும் கடந்த காலத்தில் இருந்த கடினமான சூழ்நிலையில், அவர்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்கான ஏற்பாடுகள் மிகவும் முற்போக்கானவை. தனியார் துறை ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்குமாறு தனியார் துறையிடம் கோரிக்கை விடுக்க ஜனாதிபதி முடிவு செய்துள்ளார் என தெரிவித்தார்.


No comments