Vettri

Breaking News

ஹெரோயின் போதைப்பொருளுடன் பொலிஸ் உத்தியோகத்தர் உட்பட 9 பேர் கைது!




 மாத்தறை ஹக்மான தெனகம பிரதேசத்தில் இடம்பெற்ற  விசேட சுற்றுவளைப்பின் போது 7,140 மில்லிகிராம் பெறுமதியான 34 ஹெரோயின் போதைப்பொருள் பொதிகளுடன் பொலிஸ் உத்தியோகத்தர் உட்பட 9 பேர் சந்தேகத்தின் பேரில்  வெள்ளிக்கிழமை (03) கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர் தெய்யந்தர பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றுபவராவார்.





ஹக்மன பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசிய தகவலின் பேரில் தெனகம பிரதேசத்தில் நேற்றைய தினம் விசேட சுற்றுவளைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த சோதனையின் போது குறித்த பொலிஸ் உத்தியோகத்தரின் வீட்டில் 3,150 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளும்,  ஏனைய சந்தேக நபர்களிடம் இருந்து மேலும் 3,990 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு சந்தேக நபர்கள் இன்று சனிக்கிழமை (04) தெய்யந்தர மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தவுள்ளனர்.

No comments