Vettri

Breaking News

மொரட்டுவையில் 8 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகம் : இராணுவ கோப்ரல் கைது!




 


மொரட்டுவை பிரதேசத்தில் 8 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய குற்றச்சாட்டில் இராணுவ கோப்ரல் ஒருவர் நேற்று வியாழக்கிழமை (16) மொரட்டுவை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைதுசெய்யப்பட்டவர் பாணந்துறை, நல்லுருவ பொறியியல் சேவை படை முகாமில் கடமையாற்றும் இராணுவ  கோப்ரல் ஆவார்.

குறித்த இராணுவ கோப்ரல் நவம்பர் மாதம் 15 ஆம் திகதி முதல் 21 ஆம் திகதி வரை விடுமுறையில் இருந்த நிலையில், குறித்த சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்தியுள்ளதாக  பொலிஸார் தெரிவித்தனர்.

பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய் பொலிஸில் முறைப்பாடு செய்ததையடுத்து சந்தேக நபர் மொரட்டுவை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பாதிக்கப்பட்ட சிறுமி களுத்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் பாணந்துறை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மொரட்டுவை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

No comments