வன விவசாயத்திற்காக 87 ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு வழங்க அமைச்சரவை அனுமதி
காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் அதிகார வரம்பிற்குட்பட்ட 87 ஏக்கர் காணியை வன விவசாயத் திட்டத்திற்காக இலங்கை புகையிலை கம்பனி பிஎல்சிக்கு (CTC) குத்தகைக்கு வழங்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
குத்தகையானது 30 ஆண்டுகளுக்கு அனுமதிக்கப்படுகிறது.
இரத்தினபுரி மாவட்டத்தில் எம்பிலிப்பிட்டிய பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட பனமுர கிராம உத்தியோகத்தர் பிரிவில் மடுவன்வல நிந்தகம தோட்டத்தில் அமைந்துள்ள காணியே மேற்படி குத்தகைக்கு வழங்கப்படுகின்றது.
நிறுவனம் சமர்ப்பித்த திட்ட அறிக்கையின் முழுமையான மதிப்பீட்டின் பின்னரே இந்த அனுமதி வழங்கப்பட்டதாக அமைச்சரவை அலுவலகம் தெரிவித்துள்ளது.
No comments