Vettri

Breaking News

ஜனாதிபதி உட்பட 80 உயர் அதிகாரிகள் டுபாய் செல்லவுள்ளதாக தகவல்!





 ஐக்கிய நாடுகளின் காலநிலை தொடர்பான மாநாட்டுக்கு, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் அரசாங்கத்தின் 80 உயர் அதிகாரிகள் அடுத்த வாரம் டுபாய் செல்லவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரி, வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர, சுற்றாடல் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, காலநிலை மாற்றம் தொடர்பான ஜனாதிபதியின் ஆலோசகர் ருவான் விஜேவர்தன உள்ளிட்ட 80 பிரதிநிதிகள் இந்த பயணத்தில் இணைந்து கொள்ளவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. ஐக்கிய நாடுகளின் காலநிலை தொடர்பான மாநாடு அடுத்த வாரம் டுபாயில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments