சீரற்ற காலநிலையால் 8 மாவட்டங்கள் பாதிப்பு : ஒருவர் உயிரிழப்பு
சீரற்ற காலநிலை காரணமாக நாட்டின் எட்டு மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
இதுவரை சுமார் ஆயிரம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர்ந்துள்ளனர், உயிரிழப்பு ஒன்று பதிவாகியுள்ளது என அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
மின்னல் தாக்கம்
அநுராதபுரம் மாவட்டத்தின் கலென்பிதுனுவெவ பிரதேசத்தில் இந்த உயிரிழப்பு பதிவாகியுள்ளது.
வயலில் வேலை செய்து கொண்டிருந்த 35 வயதுடைய ஒருவரே மின்னல் தாக்கம் காரணமாக இவ்வாறு உயிரிழந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments