பனை பொருள் ஏற்றுமதி மூலம் 78 மில்லியன் வருமானம்
சர்வதேச சந்தையில் பனை வெல்லம் மற்றும் தேன் உள்ளிட்ட உற்பத்திகளுக்கு அதிக கேள்வி நிலவுவதாக விவசாய திணைக்களம் தெரிவித்துள்ளது.
அவ்வகையில், இந்த வருடம் ஒக்டோபர் மாதத்திற்குள் பனை பொருட்களை ஏற்றுமதி செய்ததன் மூலம் 78 மில்லியன் ரூபா வருமானம் நாட்டிற்கு கிட்டியுள்ளது.
பயிற்சிகள்
இதற்கிணங்க, நாட்டில் பனை தொடர்பான உணவு கைத்தொழில் மற்றும் வீட்டு உபயோகப்பொருட்கள் உற்பத்திகளுக்கான பயிற்சிகளை வழங்குவதற்கான வேலைத்திட்டங்களை தயாரிக்குமாறு விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
No comments