தளபதி 68 படத்துடன் இணையும் மற்றொரு சூப்பர்ஹிட் திரைப்படம்.. வெங்கட் பிரபு சம்பவம்
சினிமாட்டிக் யூனிவெர்ஸ்
சமீபகாலமாக தமிழ் சினிமாவில் பெரிதும் பேசப்பட்டு வரும் விஷயம் சினிமாட்டிக் யூனிவெர்ஸ் என்பதை பற்றி தான்.
ஹாலிவுட் திரையுலகில் மார்வெல், DC படங்கள் இதை தொடர்ந்து செய்து வந்தாலும் கூட தமிழில் இந்த சினிமாட்டிக் யூனிவெர்ஸ் பிரபலமாக முக்கிய காரணமே லோகேஷ் கனகராஜின் விக்ரம் படம் தான்.
விக்ரம் - கைதி படங்களை இணைத்து தனக்கென்று தனி யூனிவெர்ஸை உருவாக்கினார். அதை லியோ படத்திலும் கொண்டு வந்து அனைவருக்கும் சர்ப்ரைஸ் கொடுத்தார்.
தளபதி 68
இந்நிலையில், இயக்குனர் வெங்கட் பிரபுவும் சினிமாட்டிக் யூனிவெர்ஸ் என்ற கான்சப்ட்டை கையில் எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இவர் இயக்கத்தில் தற்போது தளபதி 68 படம் உருவாகி வருகிறது. நடிகர் விஜய் ஹீரோவாக நடித்து வரும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், புத்தாண்டு ஸ்பெஷலாக தளபதி 68 First லுக் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வெங்கட் பிரபு சினிமாட்டிக் யூனிவெர்ஸ்
இந்நிலையில் லேட்டஸ்ட்டாக வெளியாகியுள்ள அப்டேட் என்னவென்றால், தளபதி 68 படத்துடன் மாநாடு படத்தை இணையப்போகிறாராம் வெங்கட் பிரபு.
இதன்மூலம் தனக்கான தனி சினிமாட்டிக் யூனிவெர்ஸை வெங்கட் பிரபு உருவாக்க போகிறார் என தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், இது எந்த அளவிற்கு உண்மையான தகவல் என்று தெரியவில்லை.
இந்த தகவல் திடீரென உலா வர முக்கிய காரணமே இயக்குனர் வெங்கட் பிரபு தான். மாநாடு திரைப்படம் வெளிவந்து இரண்டு வருடங்களான நிலையில், நடிகர் சிம்பு தனது சமூக வலைதள பக்கத்தில் மீண்டும் மாநாடு லூப் எப்போது என்பது போல் கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதில் கொடுத்த இயக்குனர் வெங்கட்பிரபு 'லூப் தொடரும்' என பதிவு செய்திருந்தார். இதை பார்த்த ரசிகர்கள், தளபதி 68 படத்துடன் மாநாடு இணைகிறது. இது ஒரு புதிய சினிமாட்டிக் யுனிவர்ஸ் என கூறி வருகிறார்கள். பொறுத்திருந்து பார்ப்போம் தளபதி 68ல் என்ன நடக்க போகிறது என்று.
No comments