Vettri

Breaking News

மன்னாரில் தங்கம் கடத்த முயன்ற 5 பேர் கைது




 மன்னார் - ஓலைத்தொடுவாய் பகுதியில் சிறிலங்கா கடற்படையினரால் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது, சட்ட விரோதமாக 2.15 கிலோகிராம் தங்கத்தை கடத்த முயன்ற 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சிறிலங்கா கடற்பரப்பில் இடம்பெறும் சட்டவிரோத செயற்பாடுகளைத் தடுப்பதற்காக கடற்படையினர் மேற்கொள்ளும் சோதனை நடவடிக்கையின் போதே இந்தக் கைது இடம்பெற்றுள்ளது.

மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக

அத்துடன் குறித்த சட்டவிரோத நடவடிக்கைக்கு பயன்படுத்தப்பட்ட படகு, உந்துருளி மற்றும் முச்சக்கர வண்டி என்பன கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

மன்னாரில் தங்கம் கடத்த முயன்ற 5 பேர் கைது | 5 People Arrested Trying To Smuggle Gold In Mannar

இதேவேளை கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 28 முதல் 56 வயதுகளுக்கு இடைப்பட்ட வங்காலை மற்றும் மன்னார் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என  கடற்படை தெரிவித்துள்ளது.

மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக 5 சந்தேகநபர்களும் பறிமுதல் செய்யப்பட்ட தங்கம் மற்றும் வாகனங்களுடன் காங்கேசன்துறையில் உள்ள சுங்க திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.இதேவேளை கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 28 முதல் 56 வயதுகளுக்கு இடைப்பட்ட வங்காலை மற்றும் மன்னார் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என  கடற்படை தெரிவித்துள்ளது.

GalleryGalleryGalleryGallery

No comments