Vettri

Breaking News

வெலிகந்தயில் பஸ் குடைசாய்ந்ததில் 30 பயணிகள் காயம்!!





 பொலன்னறுவையிலிருந்து வெலிகந்த சிங்கபுர பகுதியில் உள்ள தனியார் அரிசி ஆலை ஊழியர்களை ஏற்றிச் சென்ற பஸ்  ஒன்று இன்று (30) வெலிகந்த முத்துவெல்ல பிரதேசத்தில் வீதியை விட்டு  விலகி கவிழ்ந்துள்ளதாக வெலிகந்த பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்தில் காயமடைந்த 30  பேர் பொலன்னறுவை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக வெலிகந்த வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர்  தெரிவித்துள்ளார்.

குறித்த பஸ்ஸில் சுமார்  80  ஊழியர்கள் இருந்ததாகவும், சிறு காயங்களுக்கு உள்ளான பல ஊழியர்கள் சிகிச்சை பெற்று வைத்தியாசலையில் இருந்து வெளியேறியதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரியவருகின்றது.

No comments