Vettri

Breaking News

ஒரே போட்டியில் விராட் கோலியின் 3 சாதனைகள் !




 ஒருநாள் கிரிக்கெட்டில் தனது 50ஆவது சதத்தை நிறைவு செய்தார் விராட் கோலி. இதன் மூலம் சச்சினின் முந்தைய சாதனையை முறியடித்திருக்கிறார் கோலி.

இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் அரையிறுதி போட்டி மும்பையில் நடைபெற்று வருகிறது. இதில் நாணய சுழற்சியில் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. ரோகித் ஷர்மா அதிரடியா ஆடி 47 ரன் எடுத்து ஆட்டமிழந்தார். சுப்மன் கில் முதுகு பிடிப்பு காரணமாக 79 ரன் எடுத்திருந்த நிலையில், வெளியேறினார்.

இந்திய அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் விராட் கோலி சிறப்பாக விளையாடினார். அவர் ஒருநாள் போட்டிகளில் ஏற்கனவே 49 சதத்துடன், சச்சின் டெண்டுல்கரின் சாதனையை சமன் செய்திருந்தார். இந்நிலையில், இன்றைய போட்டியில் அவர் தனது 50ஆவது சதத்தை நிறைவு செய்தார்.

இதன் மூலம் அவர் சச்சினின் சாதனையை முறியடித்ததோடு, ஒருநாள் கிரிக்கெட்டில் 50 சதங்களை கடந்த முதல் வீரர் என்ற சாதனையையும் படைத்துள்ளார். தனது சதத்தை நிறைவு செய்த விராட், சச்சின் முன் தலை வணங்கினார். மும்பை மைதானமே அவரது இந்த சாதனையால் அதிர்ந்தது.

மேலும், ஒரே உலகக் கோப்பை தொடரில் அதிக ரன் அடித்த வீரர் என்ற சாதனையையும் விராட் கோலி இன்று படைத்தார். 2003ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடரில் சச்சின் டெண்டுல்கர் 673 ரன் எடுத்திருந்ததே சாதனையாக இருந்தது. அதையும் அவர் இன்று கடந்துள்ளார். இதையடுத்து அணியின் ரன் ரேட்டை உயர்த்த அதிரடி காட்டிய விராட் 117 ரன்னுக்கு ஆட்டமிழந்தார்.

Virat Kohli Profile - Cricket Player India | Stats, Records, Video

No comments